20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருப்பதால் இப்படம் பலவித வசூல் சாதனைகளையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது ஐ படம். அதாவது தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே டீஸர் ஒன்றை அதிகம் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே ஐ படம் சாதித்திருக்கிறது. தற்போது 80 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் டீஸர், டிரைலர் மட்டுமே இவ்வளவு பெரிய எண்ணிக்கையை சந்தித்துள்ளன. முதன்முறையாக ஒரு தமிழ்ப்படம் இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதற்கு முன்பு கோச்சடையான் படத்தின் டிரைலர்தான் (46 லட்சத்திற்கும் மேற்பட்டோர்) அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த சாதனையை 15 நாட்களிலேயே முறியடித்த ஐ திரைப்படம் தற்போது 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்து வியக்க வைத்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி