சென்னை:-நடிகர் கார்த்தி தற்போது கொம்பன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மீன் வெட்டி அருவி உள்ளது. இது காட்டாற்றில் உருவாகி இருக்கும் அருவி. இந்த இடத்தில்தான் கடந்த சில நாட்களாக கொம்பன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இங்கு படக்குழுவினர் சண்டைக் காட்சிகள் எடுத்து வந்த நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரவு நேர படப்பிடிப்பு என்பதால் இதனை யாரும் கவனிக்கவில்லை. இடுப்பளவு தண்ணீரில் நின்று சண்டைபோட்ட கார்த்தியின் கழுத்தளவுக்கு தண்ணீர் வரவும்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. பின் அனைவரும் சத்தம் போட, உடனே வனத்துறையினர் வந்து அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி