ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் உருவாகியிருப்பதால் லிங்கா ஆல்பத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த ஐ, காவியத்தலைவன் ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியிருப்பதால், லிங்காவும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் லிங்கா படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சென்னையில் உள்ள முன்னணி ஆடியோ கம்பெனிகள் லிங்கா ஆடியோரைட்ஸ் கேட்டு அணுகியும், சௌந்தர்யா ரஜினி வேலை பார்க்கும் மும்பையைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனத்துக்கு ஆடியோ ரைட்ஸை விற்றிருக்கிறார்கள். இந்த டீலை முன்னின்று முடித்தவர் சௌந்தர்யா ரஜினிதானாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி