ஆண்கள் சொல்வதை கவனிக்காமல் சென்ற ஷோஷானாவிடம், உன்னை ஒருவர் அழகாக இருக்கிறாய் எனச் சொன்னால், அவர்களுக்கு நீ இன்னும் அதிகமாக நன்றி சொல்லவேண்டும்’ எனவும் சில ஆண்கள் கூறி இருக்கின்றனர். வீடியோவின் ஒரு பகுதியில் சாலையில் நடக்கும் நடிகைக்கு அருகே ஒரு நபர் தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் நடந்தபடியே இருக்கிறார்.பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சாலைகளில் நடைபெறும் துன்புறுத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சாரிட்டி ஹோலபாக்! என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு சுமார் 9.8 மில்லியன் மக்கள் அதனை பார்த்துள்ளனர்.
சாலையில் நடந்துசென்ற ஷோஷானாவிற்கு முன் நடந்து சென்ற ராப் ப்லிஸ் எனும் நபர் தனது பையில் வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படமாக்கிய இந்த வீடியோ பிரபலமானதை அடுத்து, அந்த வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கொலை, கற்பழிப்பு மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ஷோஷானா ராபர்ட்ஸ், இந்த வீடியோ பிரபலமானதை அடுத்து, பலரும் எனக்கு நேர்மறையான செய்திகளை அனுப்பியிருந்தனர். சிலர் மட்டும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் அனுப்பியுள்ளனர். நான் பாதுகாப்பாக உணரவில்லை. நான் காவல் துறையில் புகார் அளிக்கும் முடிவில் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி