மாஸ்கோ:-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜெர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் புதினுக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்திக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மாஸ்கோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, புதின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இது போன்ற சூழ்ச்சிகளை அவர்கள் (அமெரிக்கா) நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே புதின் குறித்து இது போன்ற வதந்திகள் உலா வருகின்றன. நோய் காரணமாக பொது இடங்களில் மிகுந்த உடல் வலி மற்றும் வேதனையுடன் அவர் தோன்றுகிறார் என பலர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக வதந்தி பரவியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி