செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 12வது சாம்பியன் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி!…

சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 12வது சாம்பியன் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி!…

சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 12வது சாம்பியன் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி!… post thumbnail image
லீட்ஸ்:-சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், புள்ளிகள் (பாயிண்ட்) அடிப்படையிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி. தற்போது ‘டைம்’ அடிப்படையிலான போட்டியிலும் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

1928-893 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை வீழ்த்தி 12-வது சாம்பியன் பட்டத்தை வென்றார். ஏற்கனவே, 2005 மற்றும் 2008-ல் கிராண்ட் டபுள் பட்டங்களை வென்ற பங்கஜ் சென்ற வாரம் புள்ளிகள் அடிப்படையில் உலகின் நம்பர்-1 வீரரான பீட்டர் கில்கிரிஸ்டை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி