லீட்ஸ்:-சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், புள்ளிகள் (பாயிண்ட்) அடிப்படையிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி. தற்போது ‘டைம்’ அடிப்படையிலான போட்டியிலும் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
1928-893 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை வீழ்த்தி 12-வது சாம்பியன் பட்டத்தை வென்றார். ஏற்கனவே, 2005 மற்றும் 2008-ல் கிராண்ட் டபுள் பட்டங்களை வென்ற பங்கஜ் சென்ற வாரம் புள்ளிகள் அடிப்படையில் உலகின் நம்பர்-1 வீரரான பீட்டர் கில்கிரிஸ்டை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி