செய்திகள்,திரையுலகம் கார்த்தி ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா!…

கார்த்தி ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா!…

கார்த்தி ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா!… post thumbnail image
சென்னை:-தற்போது ‘கொம்பன்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கார்த்தி நடித்த படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அவருக்கு அங்கும் ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்கெனவே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்போது நேரடியான தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் கதைப்படி படத்தில் ஒரே ஒரு ஹீரோயின்தானாம். நாகார்ஜுனாவும், கார்த்தியும் ஒரே ஹீரோயினை காதலிப்பது போல்தான் கதை அமைந்திருக்கிறதாம். அதனால் இருவருக்கும் பொருத்தமான ஜோடியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். தற்போது, படத்தின் நாயகியாக தமன்னாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம். தமன்னா கார்த்தியுடன் தமிழில் இதற்கு முன் பையா, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார், ஆனால், இதுவரை நாகார்ஜுனாவுடன் தமன்னா ஜோடி சேர்ந்து நடித்ததில்லையாம்.

அதனால், ஒருவருக்கு ஹிட் ஜோடியாகவும், மற்றொருவருக்கு புது ஜோடியாகவும் தமன்னா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்களும் விரும்புவதாகத் தெரிகிறது.
தமிழில் கார்த்தி – தமன்னா இடையே ஒன்றாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தமன்னா தமிழ்ப் படங்களில் நடிப்பதில் இருந்தும் ஒதுங்கினார். நீண்ட ‘வீரம்’ படத்தில் நடித்தார். தற்போது அவர் மீண்டும் கார்த்தி ஜோடியாக நடிக்க அவரும் சம்மதிப்பாரா என்பதே கேள்வி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி