‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இங்கும் ராசியான நடிகையாகிவிட்ட சமந்தா ஏன் புதிய படங்களை சம்மதிக்கத் தயங்குகிறார் என்று தெரியவில்லையாம். தெலுங்கில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் அங்கும் புதிய படங்களில் நடிக்க சம்மதிக்கவில்லை என்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்த வரை அங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் சமந்தா நடித்துவிட்டார். இதுவரை கிளாமராக மட்டுமே நடித்துக் கொண்டிருந்தவர், ‘கத்தி’ படம் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதுமே இனி நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கப் போகிறேன், என அறிவித்திருந்தார்.
ஒருவேளை சமந்தா இனி கிளாமராக நடிக்க மாட்டார் என சமந்தாவே சொல்லி விட்டதால் மற்றவர்கள் அவர்களை அணுகத் தயங்குகிறார்களா என்றும் தெரியவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சமந்தா இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியிருந்ததையும் ஒரு வேளை அவர் அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாரோ என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி