அந்தாரிவாதுலே படத்தில் டைரக்டர் என்னை அணுகி கதை சொன்னபோது மதுகுடிக்கும் காட்சி ஒன்று உள்ளது என்றும் அதில் நான் மது அருந்துவதுபோல் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார். எனக்கு தயக்கமாக இருந்தது. பிறகு அவரே என்னிடம் நிறைய பெண்கள் ‘பப்’களுக்கு அடிக்கடி செல்கிறார்கள் என்றார். அங்கு பெண்கள் மது குடிப்பது சகஜமாக நடக்கிறது என்றும் கூறினார். அதனால் நான் நடித்தேன்.
பெண்கள் மது குடிப்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. நான் மது அருந்தியது இல்லை. ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து நான் வந்து இருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே எது சரி, எது தப்பு என்பதை சொல்லி என்னை வளர்த்துள்ளனர். நண்பர்களுடன் ‘பப்’களுக்கு போகும்போது பழரசம் ஆர்டர் பண்ணி அருந்துவேன். பெண்கள் ஆனாலும் சரி, ஆண்கள் ஆனாலும் சரி மது குடிப்பது கெட்ட பழக்கம். இதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்படுவது ஒரு ஜாலிக்காகத்தான். அதை வாழ்க்கையில் யாரும் பின்பற்றக் கூடாது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி