பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய நிலையில் சிறிது நேரத்திலேயே நேற்று இரவு 11.45 மணியளவில் சென்னை ராயப்பேட்டை திரு.வி.க.சாலையில் உள்ள சத்யம் திரையரங்கின் மீது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் தொடுத்தது. உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் திரையரங்கின் முகப்பில் இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.
மேலும், திரையரங்க வளாகம் முழுவதும் அந்த மர்ம கும்பல் அடித்து நொறுக்கினர். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை திரையரங்கின் மீது வீசி, அந்த மர்மகும்பல் தப்பிச்சென்றனர். இதில் திரையரங்கு முன்பகுதி பயங்கர சேதமடைந்தது. இதுகுறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘கத்தி’ படம் வெளிவரக்கூடாது என்று வலியுறுத்தி சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி