ஸ்ரீஜா, நடிகர் பவன்கல்யாணின் தீவிர ரசிகை. அவர் நடித்த கப்பர் சிங் படத்தை பார்த்து பவன்கல்யாணை கப்பர் சிங் என்றே அழைத்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு பவன்கல்யாணை பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறினார்.ஆனால் மரண படுக்கையில் இருக்கும் ஸ்ரீஜாவின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டதே என்று அவரது தந்தை கதறி அழுதார்.
இதனை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அறிந்த நடிகர் பவன்கல்யாண் ஸ்ரீஜாவை சந்தித்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டார்.விசாகப்பட்டினம் புயல் சேத பகுதியை பார்க்க வந்த பவன்கல்யாண் ராஜ முந்திரியில் இருந்து காரில் கம்மம் வந்தார். நேராக ஸ்ரீஜா சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை சந்தித்தார். கோமா நிலையில் இருந்த ஸ்ரீஜா பவன் கல்யாண் வந்ததை உணர முடியவில்லை.
ஸ்ரீஜாவின் அருகில் அமர்ந்த பவன்கல்யாண் அவளது கையை பிடித்து வருடிய படி காது அருகில் குனிந்து ஸ்ரீஜா நான் பவன்கல்யாண் வந்த இருக்கிறேன்’’ என்று மெல்லிய குரலில் கூறினார்.
உடன் இருந்த ஸ்ரீஜாவின் தந்தை நாகையாவும், ஸ்ரீஜா உனது கப்பர்சிங் வந்து உள்ளார். கண் திறந்து பாரேன் என்று கதறியபடி கூறினார். ஆனாலும் ஸ்ரீஜாவிடம் எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. பெற்றோர்கள் கதறி அழுததை கண்டு பவன் கல்யாண் கண் கலங்கினார்.ஸ்ரீஜா குணமடைய வேண்டுதல் நடத்தி கொண்டு வந்த விநாயகர் சிலையை பரிசளித்தார். மேலும் அவளது சிகிச்சைக்கு உதவியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அவளது தந்தையிடம் வழங்கினார்.நீண்ட நேரம் அங்கிருந்த பவன்கல்யாண் தான் வந்திருப்பதை ஸ்ரீஜா உணரவேண்டும் என்று பலவாறு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி