இந்த வெள்ளிக்கிழமை (அக் 17) ஒரு தமிழ் படம்கூட வெளிவரவவில்லை லெப்ட் பிகைண்டு (பிளைட் 257 நியூயார்க் டூ லண்டன்) என்ற ஆங்கில படம் மட்டுமே வெளிவந்துள்ளது. இன்னும் 4 நாட்களில் தீபாவளி வர இருக்கிறது. அன்று கத்தி, பூஜை என்ற இரண்டு பெரிய படங்கள் வெளிவருகிறது. இந்த வாரம் படத்தை வெளியிட்டால். அது என்னதான் நல்ல படமாக இருந்தாலும் தீபாவளியன்று படத்தை தூக்கிவிட்டு புதிய படத்தைத்தான் போடுவார்கள். அதற்கு பயந்துதான் யாரும் இந்த வாரம் படம் ரிலீஸ் செய்யவில்லை.
தீபாவளிக்கு அடுத்த வெள்ளிக்கிழமையும் (அக் 24) இதே நிலைதான் நீடிக்கும். 31ந் தேதி வெள்ளிக்கிழமைதான் மற்ற படங்கள் ரிலீசாகும். நவம்பர் மாதம் ஐ படம் வெளிவருகிறது. டிசம்பர் மாதம் லிங்கா வெளிவரலாம். இதனால் தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள்கூட அடுத்த ஆண்டுதான் வெளிவரும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி