செய்திகள்,திரையுலகம் திருடப்பட்ட பட ‘கத்தி’ இசை: அம்பலமான உண்மை!…

திருடப்பட்ட பட ‘கத்தி’ இசை: அம்பலமான உண்மை!…

திருடப்பட்ட பட ‘கத்தி’ இசை: அம்பலமான உண்மை!… post thumbnail image
சென்னை:-இப்போதெல்லாம் ஒரு கீபோர்டும், கம்ப்யூட்டரும் இருந்தால் போதும் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகிவிடலாம் என்ற நிலைமையாகிவிட்டது. அப்படி சமீபத்தில் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன்.

சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் சரக்கு என்று இசையமைத்த பல பாடல்கள், பல மியூஸிக் டிராக்குகள் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கையும் களவுமாக சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத். இவர் கத்தி படத்தின் டீஸருக்கு இசையமைத்த மியூசிக் டிவிபிபிஎஸ் – டோனி ஜூனியர் (DVBBS & Tony Junior ) இருவரும் இணைந்து உருவாக்கிய இம்மார்டல் (Immortal) என்ற மியூஸிக் ஆல்பத்திலிருந்து திருடப்பட்டுள்ளது என்று தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி