கத்தி படத்தை வரும் 22ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர்.
நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி