சென்னை:-கத்தி படத்தை தீபாவளியன்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். தற்போது கத்தி படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தில் கதிரேஷன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னை வருகிறார். அங்கு அவர் நண்பர் ரவி என்பவர் விஜய்யை பாங்காக் அனுப்ப முடிவு செய்கிறார்.
சென்னையில் இருக்கும் சில நாட்களில் விஜய்க்கு, சமந்தா மேல் காதல் வருகிறது, பின் வெளிநாடு பறக்கும் நேரத்தில் தான் ஜீவானந்தம் என்ற விஜய்யை பார்க்க நேரிடுகிறது. முதல் பார்வையிலேயே அவர் ரோட்டில் அடிபட்டு இருப்பது போல் தெரிகிறது. உடனே கதிரேஷன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பின் தான் தெரிகிறது ஜீவானந்தம் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு பெரிய புள்ளி என்று, பின் கதிரேஷன், ஜீவானந்தமாக மாறி அவர் விட்டு போன பணிகளை செய்து முடிப்பதாக அந்த கதையில் உள்ளது.
ஆனால் இது அதிகாரப்பூர்வமானது இல்லை, நெட்டில் மிகவும் வேகமாக இந்த கதை பரவி வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி