சென்னை:-ஆந்திராவில் தாக்கிய ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பல நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து பல நிதி உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருந்தும் முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்தனர்.
ஆனால் டோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் கதாநாயகிகளான ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சமந்தா, தமன்னா, அனுஷ்கா, காஜல் போன்ற கதாநாயகிகள் இதுவரை ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இது ஆந்திர மக்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி