இந்த நேரத்தில் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு வெளியாவதற்கான சூழ்நிலை இருந்தபோதும், வேலைப்பாடுகள் முடியாததால் தீபாவளி அன்று வெளியிடவே முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் நடிக்கும் 58வது பட வேலைகளும் இன்னொரு பக்கம் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்படம் சரித்திர பின்னணியில் உருவாவதால், மகாபலிபுரத்தில் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கும் பணியும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சிம்புதேவன், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற சரித்திர படத்தை எடுத்தவர் என்றபோதும், விஜய்க்கு இதுதான் முதல் சரித்திர படமாகும். மேலும், முதல்கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடித்துவதற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது விஜய் சென்றால்கூட ஆக்சன் சொல்வதற்கு சிம்புதேவன் தயார்தானாம். ஆனால் விஜய்தான், கத்தி முதலில் திரைக்கு வரட்டும். அதன்பிறகு முழுவீச்சில் இறங்கலாம் என்று அவரை வெயிட் பண்ண சொல்லியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி