சென்னை:-‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை கேத்ரின் தெரசா, அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில், புக்காகி விட்டார். அதனால், தன் தாய்மொழியான, மலையாள சினிமாவில் இருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அவர், சில முன்னணி ஹீரோயின்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இதுபற்றி கேத்ரின் தெரசா கூறும்போது,
தமிழில் நான் நடித்த முதல் படமே ஹிட்டாகி இருப்பதால், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கிடைத்துள்ளது. அதோடு தமன்னா, காஜல் அகர்வால் நடித்தது போன்று நடிக்கும்படியும் டைரக்டர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அதனால், எனக்கென்று எந்த பாணியும் இன்னும் உருவாகாததால், டைரக்டர்கள் சொல்வது போன்று நடித்து, தமிழில் முன்னணி இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என்கிறார் அவர். கேத்ரின் தெரசாவின் இந்த முடிவு, மார்க்கெட்டில் இருக்கும் தமன்னா, காஜல் அகர்வாலை பலத்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி