சென்னை:-சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை, குறிப்பாக திரைப்பிரபலங்களுக்கு இவர் என்றால் மிக இஷ்டம்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ரஜினி பற்றி பேசிய விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ரஜினி குடும்பத்தாருக்கு நீங்கள் நெருங்கிய நண்பரா?… என்று கேட்டுள்ளனர்.
அதற்கு விளக்க அளித்த அவர் அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது, வீரா, உழைப்பாளிக்கு பிறகு ரஜினியுடன் இணைய 15 வருடங்கள் ஆனது, அதிலும் சிவாஜியில் நடித்ததற்கு ஷங்கருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மேலும் தனுஷ் என் நெருங்கிய நண்பர் என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளை கோர்த்து கவனிக்கையில் ஏதோ இவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி