சென்னை:-தனுஷின் இசைப்பயணத்தில் கொலவெறி பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.அப்பாடல் வெளியான சில தினங்களிலேயே சூப்பர் ஹிட்டானது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. இந்நிலையில், அந்த கொலவெறி பாடலைக்கேட்டதில் இருந்தே தனுசை தனது இசையில் பாட வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கன்னடபட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா. தற்போது தான் அதற்கான நேரம் கைகூடி வந்திருக்கிறதாம்.
அதனால் அதுபற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, கண்டிப்பாக பாடித்தருகிறேன் என்று கூறியுள்ளாராம். கன்னடத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் வஜ்ரகயா என்ற அந்த படத்திலும் கொலவெறி பாடல் போன்று ஒரு ஜாலியான பாடலையே பாடுகிறாராம் தனுஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி