சென்னை:-நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதன் முறையாக வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சியை களம் இறக்க அது ஒர்க்அவுட் ஆனது. தொடர்ந்து அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். சமீபத்தில் வெளிவந்த லவுகியம் படத்தில் ப்ரீத்தியின் கிளாமர் ஆந்திர ரசிகர்களை உச்சுகொட்ட வைத்து விட்டது.
அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் கிளாமராக நடித்து வருகிறார். கிக் 2 வில் ரவிதேஜாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கெனவே யாரியான் இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அறிமுகமான ப்ரீத்தி சிங், இப்போது 37 வருடங்களுக்கு பிறகு ரமேஷ் சிப்பி இயக்கும் சிம்லா மிர்சி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி