புதுடெல்லி:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம் செய்தனர். இந்த காட்சியை சானியா மிர்சா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது தொடர்பான விழிப்புணர்வு அனைவரிடமும் சென்றடைவதில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி