சென்னை:-‘காதல் அழிவதில்லை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. இங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். அங்கு ஏறக்குறைய எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம், சமந்தா நடித்து வரும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தப் பாடலில் சார்மியுடன் சமந்தாவும் சேர்ந்து நடனமாட உள்ளாராம். சுமார் 9 நிமிடப் பாடலான அந்தப் பாடலைப் படமாக்க புனே அருகில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம். அந்தப் பாடலுக்காக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவழிக்க இருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி