செய்திகள்,திரையுலகம் ரஜினிகாந்த் , சோனாக்ஷி டூயட்!…

ரஜினிகாந்த் , சோனாக்ஷி டூயட்!…

ரஜினிகாந்த் , சோனாக்ஷி டூயட்!… post thumbnail image
சென்னை:-ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர், கர்நாடகாவின் மற்ற பகுதிகள், ஹைதராபாத், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.பெரும்பாலான காட்சிகள், ஹைதராபாத், மற்றும் மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே நடந்திருக்கிறது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் படமாக்கப்படுவதால்தான் தமிழ்நாட்டுப் பக்கம் படப்பிடிப்பு நடத்த வரவேயில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஹைதராபாத்தில், ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் ரஜினிகாந்தும், சோனாக்ஷி சின்ஹாவும் இடம் பெறும் டூயட் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் காட்சி முடிந்த பின் மற்றுமொரு பாடல் காட்சியை பிரான்ஸ் நாட்டில் எடுக்க உள்ளார்களாம். அநேகமாக, அத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி