சென்னை:-ஹாட் ஷூ டான்ஸ் என்ற அமைப்பினர் சிக்காக்கோ என்ற இசை நாடகத்தை நடத்துகிறார்கள். நடனம் மற்றும் இசையோடு பிரமாண்ட லைட்டிங்கும், செட்டும் இந்த நாடகத்திற்கு அவசியம் இதற்கு நிறைய செலவாகும். அதனை ஏற்று அந்த நாடகத்தை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ஸ்பான்சர் செய்திருக்கிறது.
இந்த நாடகம் சேத்துப்பட்டில் உள்ள முக்தா வெங்கட சுப்பா ராவ் அரங்கில் நடந்தது. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, பார்த்திபன், விஷ்ணு, விக்ராந்த், வரலட்சுமி, நாசர், ராய் லட்சுமி, பவதாரிணி, வாசுகி பாஸ்கர், கிருத்திகா உதயநிதி, உள்பட பலர் வந்திருந்து பார்த்தனர். சிறந்த நாடக கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான களம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை செய்திருக்கிறேன். இந்த இசை நாடகம் ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பிற நகரங்களிலும் நடத்தப்பட இருக்கிறது என்கிறார் விஷால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி