இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி ஆடியோ விழாவுக்கு பிறகு அமைதி காத்து வந்த கத்திக்கு எதிரான தமிழ் அமைப்புகள் தற்போது மீண்டும் விழித்துள்ளன. படத்தை வெளியிடக்கூடாது என்று தியேட்டர்காரர்களிடம் முறையிடுவோம். அதையும் மீறி வெளியிட்டால் தியேட்டர்களுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் வருவதால் இந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகத்தை இறக்கி விட வேண்டாம் என்று பின்வாங்கியிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ் தற்போது, ஒருவேளை கத்தி வரவில்லை என்றால், பூலோகத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறதாம். இந்த படம் ரிலீசுக்கு ரெடியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி