கொல்கத்தா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மல்டி நேஷனல் நிறுவனம் ஒன்று நிலத்தடி நீரை உறிஞ்சி அந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை அழிக்க முனைகிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் கதிரேசனை அந்த நிறுவனம் ஆள் வைத்து அடித்து பொய்கேசு போட்டு சிறையில் அடைக்கின்றது. கதிரேசனுக்கு சிறையில் அறிமுகமாகும் ஜெகதீஷ் வெளியே வந்து அந்த கிராமத்திற்கு சென்று அந்த மல்டி நேஷனல் நிறுவனத்திற்கு எதிராக காய் நகர்த்துகிறார். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கிளைமாக்ஸ். இதுதான் கத்தி படத்தின் கதை என்று நேற்று மாலை முதல் இணையதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்த கதையில் கதிரேசன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். மேலும் இந்த கதையில் வரும் ஜெகதீஷ், துப்பாக்கி படத்தில் வரும் ஜெகதீஷ் என்பதுதான் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் என்றும், இந்த திரைப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் உண்மையில் கத்தி படத்தின் கதை இதுவல்ல என்றும், இந்த கதை யாரோ கிளப்பி விட்ட கதை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி