இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அம்மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது பற்றி பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-ஆந்திர மாநில மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம். ஒடிசா மற்றும் ஆந்திர மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் இந்திய அரசு வழங்கும். மின்சாரம், குடிநீர் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவேண்டிய காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புயல் பற்றிய தகவல்களை துல்லியமாக இந்திய வானிலை துறை தெரிவித்தது பேருதவியாக இருந்தது.அரசும் மக்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடுத்தது. இதனால் அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த கூட்டு முயற்சியால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி