நாசா:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய மேவன் விண்கலம் முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த 2013 நவம்பர் 18ம் தேதி மேவன் விண்கலத்தை ஏவியது. கடந்த 21m தேதி இரவு செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் மேவன் விண்கலம் இணைக்கப்பட்டது.
மேவன் செவ்வாய் கிரகத்தை 3 நிறங்களில் படம் பிடித்து உள்ளது செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் சூழ் நிலையை படம் பிடித்து உள்ளது சூரிய துகள்கள் செவ்வாய்கிரகத்தில் பட்டு வெளியாகும் வளிமண்டலத்தை படம் பிடித்து உள்ளது.மெல்லிய ஆக்சிஜன் உள்ள முன் கண்டிராத புற ஊதா படங்கள்.ஹைட்ரஜன் மற்றும் கார்பன் சுற்றி உள்ள சிவப்பு கிரகம் சூரிய ஒளி பட்டு ஹைடரஜன் வாயு சிதறி புற ஊதா ஒளி காட்டுகிறது. மேகங்கள் ஊடே ஆக்சிஜன் வாயு சிதறி பச்சை நிறம் காட்டுகிறது. கார்பன் சிதறி சிவப்பு நிறம் காட்டுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி