செய்திகள்,திரையுலகம் தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் விக்ரம்!…

தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் விக்ரம்!…

தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘ஐ’. இந்த படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரம், அதற்காக இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக ஒரு அகோரமான கூனி வேடத்திற்காக தனது உடம்பை வருத்தி நடித்த விக்ரமின் அந்த கெட்டப்பைப் பார்த்து விட்டு பாலிவுட் நடிகர்களெல்லாம் வாய்பிழந்து நிற்கின்றனர். இந்த மாதிரியெல்லாம் விக்ரமை தவிர யாராலுமே நடிக்க முடியாது என்று அவர்கள் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகின்றனர்.

அதோடு, ஐ படக்குழுவினரோ, இந்த படத்தில் கண்டிப்பாக விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே டைரக்டர் ஷங்கர் கருத்து சொன்னதோடு, அப்படி விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன் என்றும் கூறியிருக்கிறார்.இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளில் நடந்து வரும் நிலையில், நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிடும் வேலைகளும் நடக்கிறது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஐ படம் உருவாகியிருப்பதால், அந்த மொழிகளில் தனக்குத்தானே விக்ரம் தற்போது டப்பிங் பேசிக்கெண்டிருக்கிறார்.

இதில் இந்தியில் விக்ரமிற்கு பதிலாக வேறு நபரைத்தான் முதலில் டப்பிங் பேச வைக்க நினைத்தார்களாம். ஆனால், வேறு நபர் டப்பிங் பேசினால் விக்ரமிற்கான தேசிய விருது நழுவிப்போகும் என்பதால், இப்போது அவரையே மூன்று மொழிகளிலும் டப்பிங் பேச வைத்து வருகிறார்களாம்.முக்கியமாக, இந்த படத்தில் நடித்துள்ள அகோர கூனி வேடத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு நடித்த விக்ரம், டப்பிங்கிலும் தனது குரலை மாற்றி பேசி வருகிறாராம். அதனால் அடிக்கடி தொண்டையில் வலி ஏற்பட, அவ்வப்போது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தபடி தொடர்ந்து வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி