சென்னை:-விஷால்-ஹரி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் பூஜை.இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர்.
பொதுவாக யு சான்று பெற்ற படத்திற்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் மற்றொரு திரைப்படமான கத்தி படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே இப்படமும் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி விட்டது. இதனிடையே பூஜை படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அப்படக்குழுவினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி