சென்னை:-மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்-கெளதமி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாபநாசம். இந்த படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், நிவேதா தாமஸ், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எஸ்தர் அனில் தெலுங்கில் வெளியான த்ருஷ்யம் ரீமேக் படத்தில் வெங்கடேசுக்கு மகளாக நடித்தார்.
தெலுங்கு ரீமேக்கில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் தான், இப்போது தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் இளைய மகளாக அவரையே நடிக்க வைத்திருக்கிறார்களாம். மேலும், பாபநாசம் ஸ்பாட்டுக்கு வந்ததில் இருந்தே கமலின் நிஜமகளைப் போலவே தன்னை மாற்றிக்கொண்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் எஸ்தர் அனில்.
அதோடு, பாபநாசம் கதையில் மகள் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், எஸ்தருக்கு நடிப்பு குறித்து அவ்வப்போது அட்வைஸ் கொடுத்து வருகிறாராம் கமல். அதனால் தெலுங்கு பதிப்பில் நடித்ததை விடவும் தமிழில் எனது நடிப்பு இன்னும் பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார் எஸ்தர் அனில்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி