செய்திகள்,திரையுலகம் பாட்ஷா 2 முயற்சியை கிடப்பில் போட்ட சுரேஷ்கிருஷ்ணா!…

பாட்ஷா 2 முயற்சியை கிடப்பில் போட்ட சுரேஷ்கிருஷ்ணா!…

பாட்ஷா 2 முயற்சியை கிடப்பில் போட்ட சுரேஷ்கிருஷ்ணா!… post thumbnail image
சென்னை:-சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1995ல் வெளியான பாட்ஷா படம் அப்போதைய நிலவரப்படி 10 கோடியில் தயாரானது. ஆனால் 25 கோடி வசூல் செய்தது. மேலும், ரஜினியிடம் நீங்கள் நடித்ததில் பிடித்தமான படம் எது என்று இப்போது கேட்டாலும, பாட்ஷாவைத்தான் முதலில் சொல்வார். அந்த அளவுக்கு ரஜினியின் மனங்கவர்ந்த படம் அது.

அதனால், சமீபகாலமாக ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால், அப்படத்தை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணாவும் இரண்டாம் பாகத்துகாக ஒரு கதையை தயார் செய்து கொண்டு ரஜினியை சந்தித்திருக்கிறார். ஆனால், ரஜினியோ, பாட்ஷா இரண்டாம் பாகத்தை மறந்து விடுங்கள. காரணம் இன்னொரு முறை அந்த மாதிரி ஒரு ஹிட் படத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.

அதனால், ரஜினி பாட்ஷா-2வில் நடித்தால் மீண்டும் திரையுலகில் தனக்கொரு நல்ல என்ட்ரி கிடைக்கும் என்று முயற்சித்து வந்த சுரேஷ்கிருஷ்ணா இப்போது ரஜினியே வேண்டாம் என்று சொல்லி விட்டதால் பாட்ஷா-2 ஸ்கிரிப்ட்டையே கிடப்பில் போட்டு விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி