கூறப்பட்டுள்ளது.
மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் சுவீடனின் தலைநகர்
ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது அமைதிக்கான பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு அமைதிக்கான நோபல் பரிசை வழங்குகின்றது.நோபல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. மருத்துவம், அறிவியல், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய பரிசாக கருதப்படும் நோபல் பரிசுக்காக, உலகளாவிய அளவில் மேற்கண்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் ஆண்டுதோறும் பரிந்துரைக்கபப்படுகின்றன.
முந்தய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள், சில பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பல நாடுகளின் நாடாளுமன்ற உறுபினர்கள், சில குறிப்பிட்ட உலகளவிலான அமைப்புகள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையைச் செய்யலாம்.
இதுவரை இந்த பரிசுகளை பெற்றுள்ள பெருமைக்குரிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் குடியேறியவர்கள், வெளிநாடுகளில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்தவர்கள் ஆகியோரின் பட்டியலை இங்கே காணலாம்.
மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-ம் ஆண்டில்வழங்கப்பட்டது. இவர்தான் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியான சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்று சமூகத் தொண்டு ஆற்றிய அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
அமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014)
அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசாவுக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெறும் இந்தியர், கைலாஷ் சத்யார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்:-
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோபிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-ம் ஆண்டு வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸ்-சுக்கு 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்:-
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸ்-சுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-ம் ஆண்டு பெற்றார்.
அரசியல் அகதியாக இந்தியாவில் வாழ்பவர்:-
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, கடந்த 1959-ம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். இவருக்கு 1989-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி