சென்னை:-ஷாரூக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் அப்படத்தின் ப்ரமோஷனுக்காக படக்குழுவுடன் தீபிகாவும் சென்னைக்கு வந்திருந்தார்.அப்போது அவர் பேசும்போது, நானும் சென்னை பெண்தான் என்றார். அனைவரும் ஆச்சர்யத்துடன் அவரைப்பார்க்க, இதே சென்னையில் எனது சின்ன வயதில் சிலகாலம் நான் வாழ்ந்திருக்கிறேன் அந்த உரிமையில்தான் இப்படி சொல்கிறேன்.
மேலும், கோச்சடையான் படத்தில் ரஜினி சாருடன் நடித்ததால் எனக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் கிடைத்து உள்ளனர். அதனால் இதுவரை வடஇந்திய நடிகையாக மட்டுமே இருந்த வந்த நான் இப்போது இந்தியா முழுக்க பேசப்படும் நடிகையாகியிருக்கிறேன். இது ரஜினி சார் படம் மூலம் கிடைத்தது.
மேலும், இந்த ஹேப்பி நியூ இயர் படத்தையும் சென்னை எக்ஸ்பிரஸைப் போன்று தமிழக ரசிகர்கள் வெற்றி பெற வைத்தால், இனி நான் நடிக்கிற எல்லா படங்களுமே தமிழ்நாட்டிலும் வெளியாகும். நானும் ஒவ்வொரு படத்தின் ப்ரமோஷனுக்காகவும் தமிழ் மக்களை சந்திக்க வருவேன் என்றும் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி