இருப்பினும், வியாபார ரீதியாக விஜய் படமா? விஷால் படமா? என்று பார்க்கிறபோது விஜய் படமே எகிறி நிற்கும் என்பதால் கத்தி படத்தை வாங்குவதற்குதான் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரியப்படுகிறார்களாம். இந்த நிலையில், தீபாவளிக்கு திரைக்கு வருகிற அத்தனை படங்களுமே ஒரே நாளில் தியேட்டர்களுக்கு முண்டியடிக்க வேண்டாம் என்று, இப்போது விஜய் படத்தை தீபாவளிக்கு 4 நாளைக்கு முன்பே வெளியிடும் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவேளை, 4 நாளைககு முன்பே கத்தி திரைக்கு வந்து விட்டால், விஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டமும் நான்கு நாட்களுக்கு முன்பே களைகட்டத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி