படம் சென்சாருக்குப் போன போதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு பாடலைப் பார்த்ததில்லை என சொன்ன சென்சார் குழுவினர் படத்திலிருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டால் ‘யு’ சான்றிதழ் தருகிறோம் என்று சொன்னார்களாம். ஆனால், அந்தப் பாடலுக்காக கோடிகளை செலவு செய்து எடுத்த தயாரிப்பாளர்கள், நீங்கள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லை, பாடலை நீக்கும் எண்ணம் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம். அதனால்தான் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்ததாம்.
‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்தால் வியாபார ரீதியிலும், சாட்டிலட் உரிமை விற்பதிலும் சில இடைஞ்சல்கள் வரும், இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் படக் குழுவினர் ‘ஏ’ சர்டிபிகேட்டிற்கு சம்மதித்தது தெலுங்குத் திரையுலகில் உள்ள மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ரீமேக்தான் இந்த ‘கரன்ட் டீகா’.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி