சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டன. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகள், கேரளாவில் 200 திரையரங்குகள், மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் என இப்படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு, கதை உரிமை கேட்டு வழக்கு என பலப் பிரச்சனைகளை சமாளித்து, தற்போது படம் அடுத்த வாரம் சென்சாருக்காக காட்டப்பட இருக்கிறதாம். இன்றோ அல்லது நாளையோ படத்தின் புதிய டிரைலரையும் வெளியிட உள்ளார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி