ஜிலினா:-24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ்ஷிப் போட்டி (யூரோ) 2016ம் ஆண்டு பிரான்சில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்றில் மொத்தம் 53 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. சி பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, தனது 2-வது லீக்கில் சுலோவக்கியாவை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
இதில் அதிர்ச்சிகரமாக ஸ்பெயின் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்றில் ஸ்பெயின் தோல்வியை தழுவது 8 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். சுலோவக்கியா அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி