இந்நிலையில், கடந்த 8ம் தேதி உலக சுகாதார நிறுவனம் எபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் 7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4,033 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உலக சுகதார நிறுவன வெளியிட்ட அறிக்கையின் போது, 8033 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ளதாகவும் 3,865 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பிடத்தக்கது.
எபோலோ நோய் பாதிக்கப்பட்டுள்ள 7 நாடுகள் இரு பிரிவுகளாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது. முதல் பிரிவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக கினியா, லைபிரியா, சீராலியோன் உள்ளிட்ட நாடுகளும் இரண்டாவது பிரிவில் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட நாடுகளான நைஜீரியா, செனாகால், ஸ்பெய்ன், மற்றும் யு.எஸ் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி