சென்னை:-இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் யூத்தான ஒரு காதல் கதையை இயக்க இருக்கிறார். வருகிற 6ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செய்து வருகிறது. முறைப்படியான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று தெரிகிறது. மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுவதை பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி