சென்னை:-இந்தியில் இரண்டு படங்களில் சில ஹீரோயின்களோடு சேர்ந்து நடித்த தமன்னா, இப்போது தெலுங்கை முழுசாக நம்பிக்கொண்டிருக்கிறார். தற்போது பாகுபலியில் நடித்து வரும் அவர், மகேஷ்பாபுவுடன் நடித்த ஆகடு படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டபோதும், அவசர கதியில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
அதோடு, இதற்கு முன்பு ஒத்த பாட்டுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தால், ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எக்குத்தப்பாக பேசி வந்த தமன்னா, ஸ்ருதிஹாசன் சில படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடியே பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு வருவதால், இனிமேல் எந்த மாதிரியான வாய்ப்புகள் என்றாலும் பயன்படுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் தமன்னா. தமன்னாவின் இந்த திடீர் அறிவிப்பு ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி