செய்திகள்,விளையாட்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு எதிராக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காயம் காரணமாக ரோகித் சர்மாவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இத்தொடருக்கான அணியில் சுழற்பந்து வீச்சில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்ற கர்ன் சர்மா இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் மட்டும் இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்.

அணி வீரர்கள் விவரம் வருமாறு: தோனி, ஷிகர் தவான், அஜிங்கிய ரகானே, விராத் கோலி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோகித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி