செய்திகள்,திரையுலகம் கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70 லட்சம்!…

கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70 லட்சம்!…

கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70 லட்சம்!… post thumbnail image
சென்னை:-கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அடுத்து, 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்த ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், தற்போது மேலும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. அதாவது, யு டியூப்பில் 15 நாட்களில் 70 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இதே வேகத்தில் பார்வையார்கள் பார்த்தால் இப்படம் டீஸர் விரைவில் 1 கோடி பார்வையாளர்களைப்பெற்றுவிடும். அப்படி நடந்தால், 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சாதனையைப் படைக்கும்.ஐ படத்தின் சாதனைகள் இப்படியாக இருக்க, கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த மாதம் 18ம் தேதி வெளியானது. இந்த டீஸருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆனால், மற்ற ரசிகர்களை குறிப்பாக சாதாரண மக்களை இந்த டீஸர் பெரிய அளவில் கவரவில்லை. கத்தி படத்தின் டீஸர் வெளியாகி சுமார் 2 வாரங்கள் நெருங்கிவிட்ட நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை.விஜய்யின் முந்தைய படங்களான ஜில்லா, தலைவா ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இதைவிட பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. அதை வைத்து பார்த்தால் கத்தி டீஸருக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்றே தோன்றுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி