செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது!…

ஆசிய விளையாட்டு நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது!…

ஆசிய விளையாட்டு நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது!… post thumbnail image
இன்சியான்,:-17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் கடந்த மாதம் 20–ந் தேதி தொடங்கியது.45 நாடுகளை சேர்ந்த 9501 வீரர்– வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா 28 விளையாட்டுகளில் கலந்து கொண்டது. மொத்தம் 541 வீரர்– வீராங்கனைகள் பங்கேற்றன. 19–ந்தேதி தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.20–ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பித்தது. 2 வாரமாக நடந்த இந்த ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. கடைசி நாளான இன்று கராத்தே, டேபிள் டென்னிஸ், ஸ்சாப்ட் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடக்கிறது. இதில் 7 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

கடந்த 2010–ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என 65 பதக்கங்கள் பெற்றது. கடந்த முறையைவிட இந்த தடவை 8 பதக்கங்கள் குறைந்து உள்ளது.
இந்த ஆசிய போட்டியிலும் சீனாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. அந்த நாடு 149 தங்கம், 107 வெள்ளி, 81 வெண்கலம் உள்பட 337 பதக்கங்கள் பெற்றுள்ளது. கடந்த முறை 199 தங்கம் உள்பட 416 பதக்கங்கள் பெற்றது.
அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி 2018–ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி