சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் இதை மறுத்துள்ளனர். படம் தோல்வி அடைந்ததாகவும் நிறைய வசூல் ஈட்டியதாக போலி கணக்கு வெளியிடப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லூர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான தொகையே வசூலானதாம். இதனால் அந்த பகுதி விநியோகஸ்தர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி