சென்னை:-தற்போது கார்த்தி நடித்து வெளியாகியிருக்கும் மெட்ராஸ் படத்தின் கதையை முதலில் நடிகர் ஜீவாவிடம்தான் சொன்னார் அப்படத்தை இயக்கியுள்ள அட்டகத்தி ரஞ்சித். ஆனால், கதையில் எனக்கு பெரிதாக ஸ்கோப் இல்லையே. கதையில் வரும் செகண்ட் ஹீரோவுககுத்தான் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன்பிறகுதான் அந்த கதையை கார்த்தியிடம் சொல்லி ஓ.கே பண்ணியிருக்கிறார் ரஞ்சித். ஆனால், இப்போது படம் ஓரளவுக்கு ஹிட்டாகியிருக்கிறது. அதனால், அவசரப்பட்டு நல்ல படத்தை தவிர்த்து விட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜீவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி