சென்னை:-மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் கமல்ஹாசனும், கவுதமியும் நடிக்கின்றனர்.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்துள்ளது. கமல் இரு மகள்கள் தந்தையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தற்போது பூரண குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த படத்தின் டைரக்டர் ஜீது ஜோசப் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.இதற்காக கமலஹாசன், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா பயணமாகிறார்கள். அங்கு சில வாரங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள். ‘திரிஷ்யம்’ படப்பிடிப்பு நடந்த தொடுபுழா பகுதியில் உள்ள வீட்டிலேயே ‘பாபநாசம்’ படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி