சென்னை:-தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள் போன்றவை இணையதளத்தின் பிரதான பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
தற்போது ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பதவி இழக்க நேரிட்டது. எனவே அரசு இணையதளத்திலும் அவர் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் போடப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி